LATEST NEWS
ஹாலிவுட் படங்களை மிஞ்சிய வசூல் சாதனை… முதல் நாளே இத்தனை கோடி வசூலா?… புதிய சாதனை படைத்ததா ஜெயிலர்..??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெய்லர் திரைப்படம் முதல் நாளில் 100 கோடி வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் திரைப்படத்தை பார்த்து அனைவருமே பாசிட்டிவ்வான ரிவ்யூ கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றும் நாளையும் வார இறுதி என்பதால் இன்னும் மக்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.