CINEMA
நடிகர் விஜய்யால் இதைத் தாங்க முடியுமா…? யார் யாரோ பேசுவாங்க…. ஆர்.கே. செல்வமணி கருத்து…!!!
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான தளபதி விஜய் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதனை அடுத்து தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார். இதுவே கடைசி படம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் விஜய் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியுள்ளார். அதாவது, இயக்குநர்கள், நடிகர்களை எப்போதுமே ஒரு குழந்தையை போல் பார்ப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக வந்தாலும் திட்ட மாட்டார்கள். அப்படி பூ போல இருந்த நடிகர்கள், அரசியலுக்கு வந்தால் யார் யாரோ தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பார்கள். இதை நடிகர்களால் தாங்கவே முடியாது. இதை தாண்டி விஜய் ஜெயிக்கணும். அந்த பாப்புலாரிட்டி அவரிடம் இருக்கிறது எனக் கூறினார்.