LATEST NEWS
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு.. “நான் இந்த நாட்டில் தான் தலைமறைவாக இருக்கிறேன்”.. நீதிமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய ஆர்.கே சுரேஷ்..!!

பிரபல நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான ஆர்.கே சுரேஷுக்கு எதிராக ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆருத்ரா நிதி நிறுவனத்தினர் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி 1 லட்சம் பேரிடமிருந்து ரூபாய் 2438 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

#image_title
ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் உட்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பண மோசடி வழக்கில் ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் அவருக்கு சம்மன் பிறப்பித்தனர். அவர் தற்போது தனது மனைவியுடன் துபாயில் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே சுரேஷ் சார்பில் லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பண மோசடிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை வருகிற டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை வர இருப்பதால் நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

#image_title
போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறி பாபு முத்து மீரான், மோசடி வழக்கிலிருந்து முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றுவதாகவும், முக்கிய புள்ளிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது எனக்கூறி ஏற்கனவே கைதான ரூசோ என்பவரிடமிருந்து ஆர்.கே சுரேஷ் 12.5 கோடி பெற்றுள்ளார். இது குறித்து போலீஸ் விசாரணையை தொடங்கியதும் அவர் வெளி நாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.

#image_title
அதனால் தான் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக்கு கூறினார். அதற்கு நீதிபதி மனுதாரரான ஆர்.கே சுரேஷ் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி போலீசாரின் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும். அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டிஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

#image_title