LATEST NEWS
யாருகிட்ட….! தொலைச்சிடுவேன்….! ரசிகரின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்ட நடிகை….. வைரல் வீடியோ….!!!1

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின்பாலி. இவர் நடிப்பில் சாட்டர்டே நைட் என்ற படம் வெளிவர உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுகாக பல இடங்களுக்கு சென்று பட குழுவினர் பேட்டியளித்து வருகின்றனர். அந்த வகையில் கோழிக்கோட்டில் இருக்கும் பிரபல மால் ஒன்றில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் கதாநாயகி சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பௌன்சர்கள் கஷ்டப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் சானியா ஐயப்பன் கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டார். ரசிகர் ஒருவர் நடிகை கிரேஸ் ஆண்டனி இடம் தவறான முறையில் நடந்து கொண்டார். பாலியல் ரீதியாக அத்துமீறிய நபரை நோக்கி சானியா கோபத்தில் கன்னத்தில் பளார் என்று அறை விட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பாக சானியா ஐய்யப்பன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது “நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. உங்கள் பாசத்திற்கு நன்றி. சக நடிகையிடம் கூட்டத்தில் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டார். அதேபோல் என்னிடமும் நடந்து கொண்டார். அவரால் எதிர்வினை ஆற்ற முடியவில்லை என்பதால் நான் அப்படி செய்தேன். இதுபோல் சம்பவம் யாருக்கும் நடக்கக்கூடாது” என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றது.