LATEST NEWS
மனைவி, குழந்தைகளை விட்டுட்டு… அம்மாவுடன் ஜாலியாக சிங்கப்பூர் சென்ற சீரியல் நடிகர் சஞ்சீவ்… வெளியான அழகிய புகைப்படங்கள்…!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.
அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆலியா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு சிறிது இடைவேளை எடுத்து பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நாயகியாக இவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே கயல் சீரியலில் நாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.
இதனிடையே இருவரும் சீரியல்களில் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார்கள்.
அதே சமயம் ஒரு யூட்யூப் பக்கமும் திறந்து அதில் தங்களின் குடும்பத்தில் நடைபெறும் விஷயங்கள் குறித்த வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சஞ்சீவ் சமீபத்தில் விடுமுறையை கொண்டாட தனது தாயுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
