LATEST NEWS
வடிவேலு அழுதாரு.. அவர் வராததற்கு காரணம் இதுதான்.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்..!!

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகுமார் கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் சத்யராஜ், கமல், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், நடிகர் விஜயகாந்த் குறித்து பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் வடிவேலு ஏன் வரவில்லை என என்னிடம் கேள்வி கேட்டபோது வடிவேலு வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்தை நினைத்து அழுதிருக்கலாம். அவரும் மனிதர்தான். வர முடியவில்லையே, வந்தால் ஏதாவது திட்டுவார்களோ என நினைத்து வீட்டிலேயே இருந்திருக்கலாம்.
ஆனால் மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் படைத்த விஜயகாந்த் அவர்கள் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். வடிவேலு கண்டிப்பாக அழுத்திருப்பார் என நான் கூறினேன். தமிழ் சமுதாயத்தில் காலம் உள்ளவரை விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் விட்டு சென்ற சமுதாய பணிகளை நாம் செய்வோம் என சரத்குமார் கூறியுள்ளார்.