LATEST NEWS
உன்னுடன் நடிக்க நான் ரெடி.. ஆசை இருந்தா யூஸ் பண்ணிக்கோ.. கேப்டன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய விஷால்..!!
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகுமார் கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் சத்யராஜ், கமல், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த உதவி இயக்குனர்களுக்கு சாப்பாடு கொடுத்தார். கேப்டன் உணவில் எந்த பாரபட்சமும் பார்க்க கூடாது.
அவர் எங்களை போன்ற வாலிபர்களுக்கு ஊக்கமாக இருந்தார். அவர் பாதையில் நாங்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டோம். பல நடிகர்கள் வளர வாய்ப்பு கொடுத்தவர் கேப்டன். அந்த காலகட்டத்தில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நடிகர்கள் வளர வேண்டும் என ஆசைப்பட்டவர் அவர்தான்.
அந்த வகையில் சண்முக பாண்டியனிடம் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உனது படத்தில் எப்போதாவது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கண்டிப்பாக நான் வருகிறேன். என்னை பயன்படுத்திக் கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் சேர்ந்து ஒரு தூணாக நின்று அந்த படத்தில் நடிக்கிறேன் என விஷால் கூறியுள்ளார்.