CRIME
பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு.. பின் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசி… 42 வயது சைக்கோ செய்த கொடூரம்.. போலீசாரையே உறைய வைத்த வாக்குமூலம்..!!
சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கொடூரச் சம்பவம் ஒன்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு சந்தேகத்தின் பேரில் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, அவர் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு அதிகாரிகளே உறைந்துபோயுள்ளனர்.
அந்த நபர் 50 வயதுடைய பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து, அதன்பின் அவரது உடலுடன் உடலுறவு கொண்டதாகக் கூறியுள்ளார். அத்துடன் நிற்காமல், குற்றத்தை மறைப்பதற்காக உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், விசாரணையில் இவர் ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டிலும் இதேபோன்று ஒரு பெண்ணைக் கொலை செய்து தண்டனை அனுபவித்தவர் என்பது தெரியவந்துள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பரபரப்பும் நிலவுகிறது.
