LATEST NEWS
“8 மாதங்களுக்கு முன்னாடி மும்பைக்கு வந்தேன், ஆனா..?” இந்தியா பற்றி ஜப்பான் பெண் வெளியிட்ட திடுக்கிடும் வீடியோ.. நன்றிகளை வாரிக்குவிக்கும் நெட்டிசன்கள்..!!
“இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த பிறகு நான் உணர்ந்த விஷயங்கள்” என்ற தலைப்பில், ஜப்பானைச் சேர்ந்த பிரபல சமூக வலைத்தளப் பக்க உருவாக்குநரான ஹிகாரு-சான் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பைக்குக் குடிபெயர்ந்த இவர், இந்த இடமாற்றம் இந்தியா மீதான தனது பார்வையை முற்றிலுமாக மாற்றிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களின் அல்காரிதம்கள் பெரும்பாலும் இந்தியாவின் வறுமை மற்றும் அசுத்தம் போன்ற எதிர்மறையான விஷயங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இந்தியாவின் உண்மையான அழகையும் பெருமையையும் உலகிற்குக் காட்டவே தான் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DeMifmFICIg/?utm_source=ig_embed&ig_rid=Ah9dR0KewhNJz7ZgwAQQufV
மும்பையில் தான் வாழ்ந்த நாட்களில் இதுவரை எந்த ஒரு மோசமான அனுபவத்தையோ அல்லது அச்சுறுத்தலையோ எதிர்கொண்டது இல்லை என்று ஹிகாரு-சான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இணையத்தில் மக்கள் சத்தம் போட்டுப் பெரிதாக்கும் அளவுக்கு இங்கு எந்த ஆபத்தும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தூய்மைக்குப் பெயர் போன தனது சொந்த நாடான ஜப்பானிலும் கூட எத்தனையோ அசுத்தமான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நெத்தியடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். வெறும் வியூஸ்களுக்காகஒரு நாட்டின் நெகட்டிவ் பக்கத்தை மட்டுமே காட்டுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், ஒவ்வொரு நாட்டிற்கும் நல்ல பக்கமும் கெட்ட பக்கமும் உண்டு என்றும் அவர் தனது வீடியோவில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஹிகாரு-சானின் இந்த நேர்மறையான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய இணையவாசிகள் பலரும் அவருக்குத் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து பாராட்டி வருகின்றனர். இது குறித்துப் பதிவிட்டுள்ள இந்தியப் பயனர் ஒருவர், இந்தியாவின் மக்கள் தொகை பல கோடிகள் என்பதால், அதில் ஒரு சதவீதம் பேர் தவறு செய்தாலும் அந்த எண்ணிக்கை மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும், அதனால் தான் குற்றங்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாகத் தெரிவது போன்ற போலி பிம்பம் உருவாகிறது என்று விளக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக இணையத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் இனவெறி மற்றும் எதிர்மறைப் பிரச்சாரங்களுக்கு ஜப்பான் பெண் கொடுத்த மிகச் சரியான பதிலடி இது என்றும் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
