கலியுக கொடுமை.. வேலைக்கு வெளிநாட்டு சென்ற கணவன்.. வீட்டில் தனியாக இருந்த மனைவி டிராவல் பிளாக்கருடன் செய்த காரியம்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

கலியுக கொடுமை.. வேலைக்கு வெளிநாட்டு சென்ற கணவன்.. வீட்டில் தனியாக இருந்த மனைவி டிராவல் பிளாக்கருடன் செய்த காரியம்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!

Published

on

கரீபியன் நாடான கயானாவில், திருமண செயலி மூலம் அறிமுகமாகித் திருமணம் செய்து கொண்ட ருச்சிகா மகாராஜா மற்றும் இஷான் தம்பதியின் வாழ்க்கை, சமூக வலைத்தள மோகத்தால் விவாகரத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு பாலித்தீவிற்குச் சென்று தங்களது தேனிலவைக் கொண்டாடிய இந்தத் தம்பதியினர், தொடக்கத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு இஷான் தனது பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், வீட்டில் தனியாக இருந்த ருச்சிகா பொழுதுபோக்கிற்காக ஒரு வலைப்பதிவைத் தொடங்கி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகத் தொடங்கினார். இந்தச் சூழலில், சமூக வலைத்தளக் படைப்பாளர்களின் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற ருச்சிகாவிற்கு, முகமது சாஜித் என்ற பயண வலைப்பதிவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

தொடக்கத்தில் அரட்டையாகத் தொடங்கி, பின்னர் வீடியோ கால்கள் வரை நீடித்த இந்தத் தொடர்பு, நாளடைவில் இருவருக்குள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்திக் காதலாக மாறியுள்ளது. தனது கணவர் இஷானுக்குத் தெரியாமல் சாஜித்துடன் பழகி வந்த ருச்சிகா, சில மாதங்களுக்குப் பிறகு இஷானை விவாகரத்து செய்துவிட்டு, சாஜித்தை நீதிமன்றத் திருமணம் செய்துகொண்டார். இஷான் தனது மனைவிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், அன்பையும் கொடுத்தபோதிலும், பணிச்சுமையால் நேரத்தை மட்டுமே ஒதுக்கத் தவறினார்; ஆனால், ருச்சிகாவோ அந்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு இஷானின் வாழ்க்கையை முற்றிலும் சீரழித்துவிட்டுப் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in