CRIME
ஐயோ கடவுளே.. கேஸ் லாரி சக்கரத்தில் சிக்கிய 20 வயது வாலிபர்.. ஜிம் முடித்துவிட்டு திரும்பும் பொது நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தின் கீசரா பகுதியில், உடற்பயிற்சி கூடத்தில் தனது பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர், கேஸ் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் அகில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது வழக்கமான உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு பைக் மூலம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நகரம்பள்ளி சௌரஸ்தா சந்திப்பு அருகே இந்த கொடூர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.
எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த அகில் சாலையில் தவறி விழுந்தபோது, அந்த வழியாக வந்த கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியதால் அநியாயமாக உயிர் பிரிந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த கீசரா காவல் துறையினர், அகிலின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணமா அல்லது பைக் சறுக்கி விழுந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
