LATEST NEWS
“இவர் என் ஆடைகளைக் கலைந்தார்!..” கதறிய பிஞ்சு குழந்தை.. மயானத்திற்குள் இழுத்துச் சென்ற காமுகன்.. இறுதியில் நடந்த மரண மாஸ் ட்விஸ்ட்.. வைரல் வீடியோ..!!
பாகிஸ்தானில், மயானம் ஒன்றை நோக்கி ஒரு சிறுமியை வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற ஆசாமியை இரண்டு நபர்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்மஅடி கொடுத்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைக் கடந்து சென்ற இரண்டு ஆண்கள், ஒரு சிறுமி அலறுவதைக் கேட்டு அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது, அச்சத்தில் உறைந்திருந்த அந்தச் சிறுமி, “இவர் எனது ஆடைகளைக் களைந்து அத்துமீற முயன்றார்” என்று அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியுள்ளார். சிறுமியின் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் வார்த்தைகளைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அந்த இருவரும், குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசாமியைப் பிடித்து தர்மஅடி கொடுக்கத் தொடங்கினர்.
அப்பாவிச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று மாட்டிக்கொண்ட அந்த வாலிபன், பொதுமக்களின் அடியைத் தாங்க முடியாமல் அங்கேயே மண்டியிட்டுத் தப்பிக்க முயன்றுள்ளான். “அல்லாஹ்வின் பெயரால் என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்று அவன் கதறி அழுது, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கெஞ்சும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்தவனை நடுரோட்டில் வைத்துப் பொதுமக்கள் தண்டித்த இந்த வீடியோ, தற்போது இணையத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான கண்டனங்களுடன் வைரலாகி வருகிறது.
