தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்.இவர் அவ்வப்போது இணையத்தில் பல சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியுள்ளார்.இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் சித்தார் திருவருள் காதலித்து வந்ததாகவும் திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் சில காரணங்களால் பிரிந்ததாகவும் தகவல் வெளியானது.

தற்போது நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அதிதி பிறந்தநாள் அன்று சித்தார்த் எனது இதயத்தின் இளவரசையே என்று பதிவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து இவர்களின் காதலை ரசிகர்கள் உறுதிப்படுத்தினர். இருந்தாலும் இருவரும் இது குறித்து மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி சூப்பரான டம் டம் பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aditi Rao Hydari இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aditiraohydari)