LATEST NEWS
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனா?… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் படத்தின் ரிலீஸ் தேதியை நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நெல்சரைக்கு பல ஆண்டுகளாக நண்பராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதில் ஒரு காட்சியில் ரஜினியும் சிவகார்த்திகேயனும் அருகருகே இருக்கும் புகைப்படம் ரஜினி வீட்டில் இருக்கும் காட்சியை கண்டுபிடித்துள்ளனர்.
எனவே இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் இருப்பார் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர். இருந்தாலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் போது தான் தெரியும்.
How Many of You Notice This? #Sivakarthikeyan & #Thalaivar Photo frame in #JailerShowcase
ஒரு வேளை இருக்குமோ 😁💥🔥#Jailer #SuperstarRajinikanth #PrinceSK #Rajinikanth #JailerFromAug10 pic.twitter.com/drsPO7XrbY
— Premkumar Sundaramurthy (@Premkumar__Offl) August 3, 2023