LATEST NEWS
இப்ப வர நீங்க பார்த்த சிவகார்த்திகேயன் வேற.. ஆனா அந்த படத்துல..? மாஸ்டர் பிளான் போடும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்..!!

முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் நடிகராக உயர்ந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் சிவகார்த்திகேயனை சினிமாவின் அடுத்த படிக்கு கொண்டு சென்றது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சியின் மூலம் தனது திறமையை காட்டுபவர் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அமரன் படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆகினார்.
இது குறித்த தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த படத்தில் ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வழக்கம்போல் இல்லாமல் மாசாக காட்ட நினைத்தாராம். சிவகார்த்திகேயனின் பேசும் ஸ்டைல், உடல் மொழி, நடிப்பு என எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
அதன் படி படத்தின் ஷூட்டிங் தொடங்கியதால் ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் எப்படி நடிக்க வேண்டும் என சொல்லி கொடுப்பதற்காக ராஜேஷ் என்ற பயிற்சியாளரை நியமித்துள்ளாராம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.