CINEMA
சிறு வயதில் இருந்தே நான் அதை பார்த்து வளர்ந்தவன்…. “அமரன் “பட பேட்டியில் அப்பாவை நினைவுகூர்ந்த SK…!!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு ராணுவ வீரர் முகுந்தின் உண்மை கதையை மையமாக கொண்டது. இந்நிலையில் அமரன் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், சிறு வயதில் இருந்தே நான் யூனிபார்மை தினம் தினம் பார்த்து வளர்ந்தவன். நிறம் வேறுபாடு இருந்தாலும், பொறுப்பு ஒன்றுதான். முகுந்துக்கும் என் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்று கூறியுள்ளார்.