திடீரென ஷூட்டிங் ஸ்பாட் சென்று சூர்யா…. பிரியாணி கிண்ட சொல்லிக் கொடுத்த மம்மூட்டி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

திடீரென ஷூட்டிங் ஸ்பாட் சென்று சூர்யா…. பிரியாணி கிண்ட சொல்லிக் கொடுத்த மம்மூட்டி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே படத்தில் என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தொடங்கி மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி,ராட்சசி மற்றும் உடன்பிறப்பே என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் அடுத்ததாக முதல் முறை மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான மம்முட்டியுடன் புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார் ஜோதிகா. இதற்கு முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து அனைவரது கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு காதல் தீ கோர் என்று பேரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு திடீரென வருகை தந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பில் அனைவருக்கும் நடிகர் மம்முட்டி ஸ்பெஷலாக பிரியாணி ட்ரீட் கொடுத்துள்ளார். அப்போது சூர்யாவிற்கு பிரியாணி செய்ய சொல்லிக் கொடுத்த வீடியோவும் சூர்யா மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து பிரியாணியை பரிமாறிய புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in