சூப்பர் ஸ்டார் மனைவி லதா அவர்களை?இந்த செல்ல பேர் வச்சி தான் அழைப்பார்களாம்..?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் ஸ்டார் மனைவி லதா அவர்களை?இந்த செல்ல பேர் வச்சி தான் அழைப்பார்களாம்..??

Published

on

திருமணத்துக்குப்பின் ரஜினியை லதா பேட்டி காண்பது போல ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு பத்திரிகை ஏற்பாடு செய்தது. இதற்கு ரஜினி, லதா இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.

அப்போது, லதா கேட்ட கேள்விகளும் ரஜினி அளித்த பதில்களும் வருமாறு:-

Advertisement

லதா:- நீங்கள் எனக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகையை மணந்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்?

ரஜினி:- சினிமா நடிகையும் ஒரு பெண்தானே!

Advertisement

லதா:- படப்பிடிப்புக்குப் போய்விட்டு வீடு திரும்பும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

ரஜினி:- எனக்கு என்ன தோன்றும் என்று உனக்குத்தான் தெரியுமே! எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?” (`வேண்டாம்’ என்றார், லதா வெட்கத்தோடு)

Advertisement

கல்யாணம் ரொம்ப `லேட்’

லதா:- `ஏன் கல்யாணம் செய்து கொண்டோம். பிரம்மச்சாரியாக இருந்திருக்கக்கூடாதா’ என்று எண்ணியதுண்டா?

Advertisement

ரஜினி:- உன்னோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும்போது, கல்யாணத்தை எவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று வருத்தப்படத்தான் தோன்றுகிறது.

லதா:- வசதியான வீடு, மனத்திற்கேற்ற மனைவி, சினிமாப்புகழ் இந்த மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?

Advertisement

ரஜினி:- என் தனித்தன்மையை.

லதா:- என்னிடம் இதுவரை சொல்லாத ரகசியமோ, மறைத்து வைத்த விஷயமோ உண்டா? இருந்தால் ஏன் சொல்லவில்லை?

Advertisement

ரஜினி:- என்னிடம் எந்த ரகசியமும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட நீயே இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே, நியாயமா?

முதல் குழந்தை

Advertisement

லதா:- ஒரு மனைவியின் முதல் குழந்தை கணவன் என்கிறார்களே, அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

ரஜினி:- என்னைப் பொறுத்தவரை ஒப்புக்கொள்கிறேன்.

Advertisement

லதா:- குடும்ப வாழ்க்கையில் என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எது அடையாளம்?

ரஜினி:- நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதுதான் அடையாளம்.

Advertisement

லதா:- ஒரு பிரபல நடிகரின் மனைவியாகிய எனக்கு, உண்மையான மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது?

ரஜினி:- என்னுடைய மகிழ்ச்சியில்.

Advertisement

லதா:- என்னைப்போலவே யாராவது டெலிபோனில், `நான்தான் லதா பேசுகிறேன்’ என்று சொன்னால் நீங்கள் நம்பிவிடுவீர்களா?

ரஜினி:- என் ஜில்லுவின் குரல் எனக்குத் தெரியாதா என்ன?”

Advertisement

லதா:- மனம் விட்டுச் சொல்லுங்கள். என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எது?

ரஜினி:- முன்பின் தெரியாமல் எல்லோரிடமும் கருணை காட்டுவது!”

Advertisement

மேற்கண்டவாறு பதில் அளித்தார், ரஜினி.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in