12 வயதில் நடிப்பதற்காக ஊரை விட்டு ஓடி வந்தாரா?… நகைச்சுவை நடிகர் செந்திலின் வாழ்க்கை பயணம்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

12 வயதில் நடிப்பதற்காக ஊரை விட்டு ஓடி வந்தாரா?… நகைச்சுவை நடிகர் செந்திலின் வாழ்க்கை பயணம்…

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் முன்னணி நடிகர் மற்றும் மூத்த நடிகர் தான் நகைச்சுவை நடிகர் செந்தில். இவரின் இயற்பெயர் முன்னுசாமி. இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். தந்தை ராமமூர்த்தி தாய் திருக்கம்மாள் சினிமாவில் நடிப்பாத்துதான் என்னுடைய ஆசை என கூறினார்.  அவர் அப்பா அவமதித்த காரணத்தினால் 12 வயதிலேயே ஊரை விட்டு ஓடி  வந்தார்.

இவர் ஆரம்பத்தில்  எண்ணெய் ஆட்டும் நிலையத்திலும், மதுபான கடையிலும் பணிபுரிந்துள்ளார். நாடகத் துறையில் இணைந்து தன்னுடைய நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார்.  இவர் திரைத்துறையில் முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு 1983 ஆம் ஆண்டு வெளியான ‘மலையூர் மம்முட்டியான்’ என்ற படத்தில் நடித்து மக்களின் கவனத்தை தன் பக்கம்   ஈர்த்தார். நடிகர் செந்தில் 1984 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  ஒரு மகன் டாக்டராக பணிபுரிகிறார்,  இவர் சுமார் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர்  நகைச்சுவை நடிகரான கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த பல நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. தற்போது கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் இணைந்து நடிக்காவிட்டாலும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் இவர்களது காமெடியானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை தான் பெற்று இருக்கும்.

Advertisement