‘காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.. மனசு உடைஞ்சு போயிட்டேன்’…! முன்னாள் காதலன் கவின் திருமணம் பற்றி மனம்திறந்த லாஸ்லியா…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.. மனசு உடைஞ்சு போயிட்டேன்’…! முன்னாள் காதலன் கவின் திருமணம் பற்றி மனம்திறந்த லாஸ்லியா…!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், அன்பு, கோபம் , துரோகம் என பன்முகங்கள் காணப்படும். இதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் கூறலாம். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடைபெற்று முடிந்த பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கைப் போட்டியாளர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். இவரைப்போலவே அதே சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சீரியல் நடிகர் கவின்.

அந்த நிகழ்ச்சியில் அற்புதமாக விளையாடிய இவர் மற்றொரு பக்கம் லாஸ்ட்லியாவுடன் காதல் கொண்டார்.இவர்களின் காதல் விவகாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார். இறுதியாக கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து  கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

 

கவினின் திருமணத்தால் லாஸ்லியா மனமுடைந்து போனதாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் கவின் திருமணம் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார் லாஸ்லியா. இதைப்பற்றி அவர் கூறியதாவது, ‘கவின் திருமணம் செய்துகொண்டதை அறிந்து சந்தோஷப்பட்டேன். கெரியரிலும் நல்லா பண்ணிட்டு இருக்காங்க. அவருடன் பெர்சனல் வாழ்க்கையும் சூப்பராக போய்க் கொண்டு இருக்கிறது. அதனால் அவருக்காக நான் மிகவும் சந்தோஷப்படுறேன் என தன் முன்னாள் காதலன் கவின் குறித்து லாஸ்லியா பேசி உள்ளார். அதேபோல் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, நிச்சயம் காதல் திருமணம் தான் செய்துகொள்வேன் என உறுதியாக கூறினார்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement