நாலுபேர சிரிக்க வச்சிட்டு தனிமையில் அழுகை..? ‘சோகம் நிறைந்த VJ. பிரியங்காவின் மறுபக்கம்’!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நாலுபேர சிரிக்க வச்சிட்டு தனிமையில் அழுகை..? ‘சோகம் நிறைந்த VJ. பிரியங்காவின் மறுபக்கம்’!!

Published

on

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களின் தூண்களாக இருப்பது தொகுப்பாளர் மற்றும் தொகுப்பாளர்கள். அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளனியாக பணி  மக்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பு பெற்றவர் தான் வி ஜே பிரியங்கா. இவர் தனியார் youtube சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.  என் வீட்டில் எல்லோரும் என்னை என் அப்பா மாதிரி  இருக்கிறேன் என்று சொல்வார்கள் .என்னுடைய எமோஷனை வெளிப்படுத்தினால் என்னை சுற்றி உள்ளவர்கள் வீக்காகி விடுவார்கள் என்று எனக்கு தெரியும்.

நான் கொஞ்சம் சோகமா இருந்தால் கூட என்னுடைய தம்பி காலி என்னுடைய அம்மாவும் காலி என்னுடைய 11 வயதில் என்னுடைய அப்பா எங்களை விட்டு சென்றார் நான் வேற அப்பா செல்லம் ஆகையால் தான் அவர் சென்றவுடன் நான் இப்படி ஆகிவிட்டேன் என்று எனக்கு தோன்றும் அதன் பின்னர், பல வேலைகளை நான் பார்த்தேன். அவையெல்லாம், அம்மாவுக்கு ஏதாவது ஒரு விதத்தில் நம்மால் உதவியாக இருக்க முடியாதா என்று ஆதங்கம்தான் , என் தம்பியோ மிகவும் பிடிவாதக்காரன்.

Advertisement

எது வேண்டும் என்று நினைத்தாலும் அது கண்டிப்பாக அவனுக்கு வேண்டும் அந்த சூழ்நிலையில் தான் நான் சிறு சிறு வேலையாக பார்த்து இங்கு விஜேயவாக மாறினேன். என்னுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே எமோஷனல் தான் அண்மையில் இதை விட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.ரு விஷயம் உன்னுடையதாக இருந்தால், அது எப்படி என்றாலும், உன்னை வந்து சேரும். அது உன்னிடம் வரவில்லை என்றால், அது உன்னுடையது இல்லை என்று அர்த்தமாகும்

ஒருவர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அவருடன் நான் மிகவும் எமோஷனலாக  நெருக்கமான ஒரு இணைப்பு உருவாக்கிக் கொள்வது என்னுடைய இயல்பு அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று செய்வது என்னுடைய இயல்பாக இருந்தது அதே நேரம் என்னை வேண்டாம் என்று சொல்லி விலகி நின்றவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது என்று கூட கூறியிருந்தார்.

Advertisement