தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த். இவருக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த வருடத்தின் இறுதியில் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் சமீபத்தில் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரின் ரசிகர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஒரே ஒருவர் தான் என்று கத்தினார். அதனைப் பார்த்து ரஜினி அந்த ரசிகரியிடம் ஒழுங்காக போய் வேலையை பாருங்க என அன்போடு எச்சரித்து அனுப்பினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் விமர்சித்து வருகிறார்கள் .