LATEST NEWS
ஐயோ இவருக்கா இப்படி ஒரு நிலை?.. பிழைக்க வழி இல்லாமல் டாஸ்மாக் கடையில் பாட்டில் எடுத்து விற்கும் பிரபல நடிகரின் அவலம்..!!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்தான் அந்தோணி. உடலில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவழைக்கும் சினிமா துணை நடிகரான இவர் பொருளாதார சூழ்நிலை காரணமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டில் எடுத்து விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் என்ற பகுதியை சேர்ந்த அந்தோணி சுப்பிரமணியபுரம், திண்டுக்கல் சாரதி மற்றும் நம்ம ஊர் ராசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது குடும்பத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றார். இந்நிலையில் உடலில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவைத்த அவர் அங்கிருந்த அவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அவருக்கு பெரிய நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.