ஜோவுடன் காரில் சென்ற சூர்யா…. சுற்றி வளைத்த கேரளா ரசிகர்கள்…. பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஜோவுடன் காரில் சென்ற சூர்யா…. சுற்றி வளைத்த கேரளா ரசிகர்கள்…. பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

Published

on

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே படத்தில் என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தொடங்கி மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி,ராட்சசி மற்றும் உடன்பிறப்பே என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இந்நிலையில் அடுத்ததாக முதல் முறை மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான மம்முட்டியுடன் புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார் ஜோதிகா. இதற்கு முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து அனைவரது கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு காதல் தீ கோர் என்று பேரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சூர்யா ஜோதிகா நடித்து வரும் மலையாள திரைப்படத்தின் சூட்டிங் இருக்கு சென்றுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது கேரளாவில் சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவுடன் காரில் சென்ற போது ரசிகர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அவர்களுடன் சூர்யா செல்பி எடுத்துக் கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in