CINEMA
“G.O.A.T” படத்தின் ஓடிடி ரிலீஸில் சர்ப்ரைஸ் இருக்கு….. சீக்ரெட் சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு….!!
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான ‘கோட்’ திரைப்படம் அனைத்து மாநிலங்களிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘G.O.A.T’ படத்தின் Director’s cut ஓடிடியில் வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், ஒரு சிலர் படத்தின் நீளம் 3 மணிநேரமாக இருப்பதை குறையாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில், Director’s cut 3 மணி நேரம் 40 நிமிடங்கள் எனக் கூறிய வெங்கட் பிரபு, அதை முழுமையாக ஓடிடியில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.