தளபதி 68 படத்திற்கு முன்பு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு… அவரே வெளியிட்ட வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

தளபதி 68 படத்திற்கு முன்பு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு… அவரே வெளியிட்ட வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் பின்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அதில் முதல் மகன் தான் வெங்கட் பிரபு. அவரின் இளைய மகன் பிரேம்ஜி சினிமாவில் காமெடி நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவரின் மூத்த மகன் வெங்கட் பிரபு நடிகர், இயக்குனர்,பின்னணி பாடகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தை உருவாக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதாவது ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் நடித்து இயக்கி இருக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் பிரபல யு டியூபர்களான வில்ஸ் பட், ஆர் ஜே விஜய், ஆர் ஜே ஆனந்தி, கலக்கப்போவது யாரு பாலா, ஆர் ஜே விஜய் மற்றும் இர்பான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிடுவதால் A Venkat Prabhu Gift என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in