LATEST NEWS
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா…. என்னவா இருக்கும்?… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள்.

#image_title
இந்த திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சூர்யா நிறைவு செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி இருக்கும் சூர்யா தனது மனைவியுடன் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://twitter.com/singlecva/status/1775447331502161986
இந்நிலையில் நடிகர் சூர்யா கொடுமுடியில் இருக்கும் மகுடேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.