Uncategorized
“வாய் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் ” …” தடுக்கும் வழிமுறைகள்.”.. இதனை பாருங்கள் பயன் அடையுங்கள்…

உலகம் முழுவதும் 10 தில் 4 என்கிற சதவீதத்திற்கு வாய் புற்று நோயால் மனிதர்கள் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்தது. மேலும் இந்த வாய் புற்றுநோய் வர காரணம் புகைபிடிப்பது, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு பயன்படுத்துவது தான் . மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்கள் செய்யும் தவறான பழக்கம் தான்.
பரிசோதனை ஆய்வில் 42 சதவிகித ஆண்களும், 18 சதவிகிதப் பெண்களும் உயிரிழக்கின்றனர் இந்த வாய் புற்றுநோயால் .இதற்கான அறிகுறிகள் முதலில் வாயில் உள் பகுதியில் சிறிய புண் ஒன்று ஆரமிக்கும் அது நாள் அடைவில் உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் போன்ற இடங்களுக்கு பரவி இறுதியில் வாய் புற்றுநோயாக மாறிவிடும். இதனை தடுக்கும் சில விதிமுறைகளை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அவை : 1 . தினமும் இரண்டு வேலை பல் துலக்க வேண்டும்.
2 . புகையிலை மெல்வதும் , புகை பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.
3 . மஞ்சள், அடர் பச்சை நிறக் காய்கறிகள், கீரை, பூண்டு, திராட்சை, க்ரீன் டீ, சோயா, தக்காளி போன்ற உணவுகளை சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் புற்றுநோய் வருவதை தடுக்கும்.
4 . தினமும் உடல் பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் மேலும் புற்று நோய் உருவாகும் செல்கள் குறையும்.
5 . 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
6 . முகக்கண்ணாடியில் நம் வாயை நாமே பரிசோதித்து பார்க்க வேண்டும் ஏதேனும் வித்யாசம் தெரிகிறதா என்று அப்படி தெரிந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.