LATEST NEWS
அரசியல் ரீதியான மாஸ்டர் படத்திற்கு வந்த சர்ச்சை.. மீண்டும் அவதாரம் எடுத்த IT ரெய்டு..

விஜய்க்கு அரசியலை பற்றி பேசும்வாய்ப்பு கிடைத்தது என்றால்.அது இசை வெளியீட்டு விழாவில்தான் கிடைக்கும். அப்போழுது எல்லாம் அரசியல் வாதிகளை கழுவிஉத்துவார்.. இதனால் பல பிரச்சனைகள் வரும்..
தளபதி விஜய் சுற்றி கடந்த சில வருடங்களாக ஏதாவது ஒரு அரசியல் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.
அதிலும் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை அவருடைய காரில் கூட செல்ல அனுமதிக்காமல் கையோடு அழைத்து வந்தனர்.
அதை தொடர்ந்து விஜய்யிடம் பணமாக எதுவும் இல்லை என்று விளக்கம் கொடுத்தனர்.
பிறகு விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார், அதோடு தற்போது மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாராகி வருகின்றார்.
இந்த நேரத்தில் மீண்டும் இன்று விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு நடத்திய ரெய்டில் உள்ள ஆவனத்தை மீண்டும் பரிசோதித்தனர்.
தற்போது விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு அனைத்துமே முடிந்தது, விஜய் பிகில் படத்திற்காக ரூ 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
மாஸ்டர் படத்திற்காக ரூ 80 கோடி சம்பளம் வாங்கியுள்ளார், அதோடு விஜய் சரியாக வரி செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.