LATEST NEWS
சும்மாவே பட்டைய கிளப்புவாரு.. விஜய்க்காக அழைத்து வரப்பட்ட தெலுங்கு பிரபலம்.. GOAT படத்தின் புதிய அப்டேட் இதோ..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.மேலும் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோட் படத்தின் ஷூட்டிங்கை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டனர். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருப்பதால் ஹைதராபாத்தில் ஒரு சில காட்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளனர். கோட் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு பாடலுக்கு விஜய் தீவிரமாக டான்ஸ் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக பிரசாந்த் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக ஒரு செட் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு வாரம் தனது வீட்டிலேயே வைத்து விஜய் தீவிரமாக டான்ஸ் பயிற்சியில் ஈடுபட்டாராம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மகேஷ்பாபு நடித்த குண்டூர்காரா பாடலுக்கு கோரியோகிராப் செய்த தெலுங்கு நடன இயக்குனர் சேகர் தான் விஜயின் கோட் பட பாடலுக்கும் கோரியோகிராப் செய்கிறாராம்.
பொதுவாக நடன இயக்குனர் சேகர் ஒரு பாடலுக்கு கோரியோகிராப் செய்கிறார் என்றால் அது சூப்பராகவே இருக்குமாம். சல்மான்கான், ஷாருக்கான் என முன்னணி நடிகர்கள் தங்களது படத்திற்கு கோரியோகிராப் செய்ய சேகரை அழைக்கும் நிலையில் தற்போது அவர் கோட் படத்தில் விஜய் இடம் பெறும் பாடலுக்கு கோரியோகிராப் செய்தது எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.