LATEST NEWS
‘வித்யாசமான திருமண பரிசு’… ” கனவை… நிறைவேற்றிய தல அஜித்”..? ஆரவாரத்தில் குதிக்கும் யோகி பாபு…!!

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் யோகி பாபு இவர் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர் பல்வேறு சிரமங்களை தாண்டி தற்போது நகைசுவை நடிகரா உருவெடுத்துள்ளார். தற்போது தவிர்க்கமுடியாத தமிழ் சினிமாவாக உள்ளார்.
பாடல் வெளியிட்டு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் எங்கு சென்றாலும் யோகி பாபுவிடம் உங்களுக்கு எப்ப கல்யாணம் என்று தான் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்படுகின்றது. அதற்க்கு கடந்த வாரம் முற்று புள்ளி வைத்தார் யோகி பாபு.
மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் கடந்த வாரம் மிகவும் எளிமையான முறையில் குலதெய்வ கோவிலில் யோகி பாபுவின் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின்னர் பல்வேறு சினிமா பிரபலங்கள் பரிசுகள் மற்றும் வாழ்த்துக்கள் கூறிவந்த நிலையில் தற்போது தல அஜித் யோகி பாபுவுக்கு திருமண பரிசாக தன்னுடைய வலிமை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். தல அஜித்துடன் நடிப்பதற்கு கனவு கண்ட யோகி இதனையறிந்த சந்தோஷத்தில் துள்ளி குத்தி வருகிறார்.