CINEMA
ஆச்சர்யம்…! இவ்ளோ கஷ்டபட்டாங்களா…? வைரலாகும் ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ..!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ சியான் விக்ரம் ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டுவார். மேலும் அதற்கான கடுமையான முயற்சிகளும் மேற்கொள்வார். அந்தவகையில் அவரின் கடின முயற்சியால் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம்தான் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார் . கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் விக்ரம், மாளவிகா மோகனன் ,பசுபதி அனைவருடைய நடிப்பும் மிரட்டல் ஆகவே இருந்தது .அதேபோல ஜிவி பிரகாஷ் இசை அருமையாக இருந்தது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 18ஆம் நூற்றாண்டு கால வாழ்வியலை நம்முடைய கண் முன்னே கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட மெனக்கெடல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்திக்கிறது. செட் அமைத்த விதம், நடிகர்களிடம் நடிப்பை வாங்குவது உள்ளிட்டவை இந்த மேக்கிங் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
View this post on Instagram