LATEST NEWS
“உதைத்து… குத்தி… கீழே தள்ளி..” சீருடையில் இருந்த எங்களையே விட்டுவைக்கல…! பகீர் கிளப்பும் காவலர்களின் வாக்குமூலம்..! SIR போராட்டத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்..!!
காங்கிரஸ் தலைமை தாங்கிய ‘SIR’ போராட்டத்தின் போது, தங்களை போராட்டக்காரர்கள் உதைத்தும், குத்தியும், கீழே தள்ளித் தாக்கியதாகவும் டெல்லி காவலர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளனர். அப்பகுதியில் பிரிவு 163 அமலில் இருப்பதால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று எச்சரித்ததற்காக, கூட்டத்தில் இருந்தவர்கள் தங்களை வேண்டும் என்றே இலக்கு வைத்துப் பின்னால் இருந்து தாக்கியதாகக் காவலர் தீபேந்திர சிங் சந்து தெரிவித்துள்ளார். திடீரென தங்களைச் சுற்றி வளைத்து, தரையில் தள்ளி உதைத்து, குத்தியதாகவும், அதிலிருந்து போராடித் தப்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று தலைமைக்காவலர் பூபேந்திர அகலாவத் என்பவர் பேசுகையில், சீருடையில் இருந்த தன் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். தன்னை இடுப்புப் பகுதியில் பிடித்துத் தள்ளிவிட்டு மிதித்த நபரைக் அடையாளம் காண முயன்றபோது, அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அந்தத் தாக்குதல்தாரியை மறைத்து, அவர் தப்பிச் செல்லப் பாதுகாப்பு வழியமைத்துக் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
போராட்டத்தின் போது காயமடைந்த பெண் காவலரான சீமா என்பவர், ஆகாஷ்வாணி பவன் பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிய போது இந்த வன்முறை சம்பவம் நடந்ததாகக் கூறியுள்ளார். அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றுவதே தங்களின் முதல் கடமை என்பதால், தாக்குதலின் போது தனக்குக் காயம் ஏற்பட்டதைக்கூட உணராமல் பணியாற்றியதாகவும், பின்னரே தனக்கு ஏற்பட்ட காயங்களை அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
