LATEST NEWS
“சில பசங்க என்னை தொந்தரவு பண்றாங்கடி…” நள்ளிரவு 2 மணிக்கு வந்த ஒரே ஒரு போன் கால்… அடுத்த செகண்ட் சுவிட்ச் ஆஃப் ஆன மொபைல்.. ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..! பதறவைக்கும் பின்னணி..!1
அசாம் மாநிலம் குவாஹாட்டியிலுள்ள பி.பாரூவா கல்லூரியில் படித்து வந்த ஹிமாஸ்ரீ போரோ என்ற மாணவி, கலைக்குழுவுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு அக்டோபர் 5-ஆம் தேதி இரவு 11:50 மணியளவில் திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் S2 பெட்டியில் ஏறி குவாஹாட்டி நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
அக்டோபர் 6-ஆம் தேதி அதிகாலை சுமார் 2:39 மணியளவில், ரயிலில் சிலர் மது அருந்திவிட்டு தனக்குத் தொந்தரவு அளிப்பதாகவும், அவர்களிடம் பாதுகாப்பின்மையை உணர்வதாகவும் தனது நண்பர் மற்றும் குடும்பத்தினருக்குப் போன் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் ரயில் பெட்டியின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதன்பின் தொலைபேசி இணைப்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டு, செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால் குடும்பத்தினர் ரயில்வே உதவி மையத்தைத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர்.
ஆனால், ரயில் குவாஹாட்டி வந்தடைந்தபோது அவரது பைகள் மட்டும் பெட்டியில் பத்திரமாக இருந்தன; மாணவியைக் காணவில்லை. அதன்பின் ஆந்திரப் பிரதேசத்தின் திக்குளம்பூர் ரயில்வே தண்டவாளப் பகுதியில் ஹிமாஸ்ரீ சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது கொலையா என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பும் காவல்துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
