CINEMA
Exam இருந்ததால மறந்துட்டேன்…. சிறுவன் செய்த செயல்…. விக்னேஷ் சிவன் போட்ட பதிவு….!!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி விக்னேஷ் சிவன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் சிறுவன் ஒருவன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை மறந்துவிட்டதாகவும், அதனால் இப்பொது கேக் வெட்டுவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DALld3ygnoG/?utm_source=ig_web_copy_link