CINEMA
அடக்கடவுளே…! “கங்குவா” படத்திற்கு செக் வைத்த சென்சார் போர்டு…?
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். படம் நவ.14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் YOLO என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் திஷா பதானியின் கவர்ச்சி காட்சிகளை நீக்க வேண்டுமென ‘கங்குவா’ படக்குழுவுக்கு சென்சார் போர்டு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், திஷா பதானியின் கவர்ச்சி காட்சிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.