CINEMA
மிஸ் பண்ணிடாதீங்க…! ‘THE GOAT’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர்.
முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில்இதுவரை 20 நாட்களில் உலகளவில் ரூ. 425 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ‘THE GOAT’ படம் வரும் 3ம் தேதி NETFLIX தளத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.