“அம்மாடியோ.. மண்டை ஓடு இன்றி எரிந்த பெண் உடல்…” எலுமிச்சம்பழம், சிவப்பு சேலை பின்னணியில் இருக்கும் திகில்.. சுடுகாட்டில் நடந்த விசித்திரச் சம்பவம்.!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மாடியோ.. மண்டை ஓடு இன்றி எரிந்த பெண் உடல்…” எலுமிச்சம்பழம், சிவப்பு சேலை பின்னணியில் இருக்கும் திகில்.. சுடுகாட்டில் நடந்த விசித்திரச் சம்பவம்.!!

Published

on

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வாழ்மால்பாளையம் கீழூர் கிராம சுடுகாட்டில் மனித உடல் ஒன்று முழுவதுமாக எரிக்கப்பட்டு, எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்த விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி காலை, சுடுகாட்டில் உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாகக் கிராம நிர்வாக அலுவலர் மூலம் மண்ணச்சநல்லூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மண்டை ஓடு இல்லாமல் எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்ததையும், தலைப்பகுதி இருந்த இடத்தின் அருகே புதிய பச்சை நிற மண்பானை, சிவப்பு நிறச் சேலைத் துண்டுகள் மற்றும் பாசிமாலை ஆகியவை கிடந்ததையும் கண்டறிந்தனர்.

கைப்பற்றப்பட்ட எலும்புகளை ஆய்வு செய்த திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவை 20 முதல் 40 வயதுக்குட்பட்ட, திருமணமாகிக் குழந்தை பெற்ற ஒரு பெண்ணுடையதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். உடல் முழுமையாக எரிக்கப்பட்டுள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள போதிலும், கண்டெடுக்கப்பட்ட பற்களைத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அடையாளத்தை உறுதி செய்யப் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த மர்ம மரணம் குறித்துத் துப்பு துலக்க ஜீயபுரம் டிஎஸ்பி சங்கர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் காணாமல் போன பெண்களின் விவரங்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இதற்கிடையே, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி காலை, விபரீதம் நடந்த அதே சுடுகாட்டுப் பகுதியில் இரண்டு எலுமிச்சம்பழங்கள் அறுக்கப்பட்டு நான்கு திசைகளிலும் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பொதுமக்களிடையே நரபலி மற்றும் மாந்திரீகக் கொலை பற்றிய பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது. போலீசாரின் விசாரணையைத் திசை திருப்புவதற்காக இந்த எலுமிச்சம்பழங்கள் வைக்கப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் தனிப்படையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in