இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் முக்கிய பிரபலம்?…. இப்படி ஒரு டுவிஸ்டா?…. இதை யாருமே எதிர்பார்க்கல….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் முக்கிய பிரபலம்?…. இப்படி ஒரு டுவிஸ்டா?…. இதை யாருமே எதிர்பார்க்கல….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம்  நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார்.இந்த  நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அசீம், ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன், கதிரவன், தனலட்சுமி, அமுதவாணன் மற்றும் ராம் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் தான்.

Advertisement

இவர்களில் மணிகண்டன் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு மணிகண்டன் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in