LATEST NEWS
விடுதலை 2 படத்தின் ரிலீஸ் எப்போது..? வெற்றிமாறன் போட்ட ஸ்கெட்ச்.. இது என்னடா புது டுவிஸ்டா இருக்கு..!!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலைப் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாகவும் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். சமீபத்தில் வந்த தகவலின் படி சூரியின் காட்சிகளை எடுத்து முடித்து விட்டதாகவும் விஜய் சேதுபதிக்கான காட்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
விடுதலை 2 படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ் என பல புதிய கதாபாத்திரங்களை வெற்றிமாறன் சேர்த்துள்ளாராம். மேலும் வாத்தியார் கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் காட்சிகளும், மஞ்சு வாரியர் விஜய் சேதுபதி ஆகியோருக்காக தனிப்பட்ட கதையையும் வெற்றிமாறன் எழுதியுள்ளாராம்.
எனவே இன்னும் 5 மாதம் வரை படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளது. எனவே இப்போதைக்கு படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் குறித்தும் எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.