CINEMA
ரெடியா இருங்க…! இன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்திருக்கும் ‘வேட்டையன்’ படக்குழு…!!!
ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது . இன்று hunter பாடல் வெளியானது. மேலும் இன்று வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை இன்று நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.