தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது வொர்க் அவுட் வீடியோ ஒன்றை தமன்னா பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக சமந்தா ஒர்க்கவுட் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு தற்போது தமன்னா ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/Tamannaahspeakk/status/1627686656219443200