தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகர் மற்றும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஹரிஷ் ராகவேந்திரா. இவர் தேவதையை கண்டேன் , சர்க்கரை நிலவே, மெல்லினமே மெல்லினமே உள்ளிட்டா பல பாடல்களை பாடியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் விகடன் என்ற திரைப்படத்தில் அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்துள்ளார். திருப்பதி திரைப்படத்திலும் முதன்மை நாயகன் அஜித்திற்கு அண்ணன் வேடத்தில் நடித்துள்ளார். ஒளிப்படக் கலைஞர் ராகவேந்திரனின் மகன் தான் ஹரிஷ் ராகவேந்திரா.

தமிழ் சினிமாவில் அந்த காலம் தொடங்கி தற்போது வரை ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தன்னுடைய 18 வயதில் பாடல் பாடத் தொடங்கிய இவர் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். சமீபகாலமாக இவர் அவ்வளவாக பாடல்கள் பாடுவது இல்லை.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய ஒரு மகளுக்கு ஹரிஷ் ராகவேந்திரா பாடல் சொல்லிக் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பார்த்து வைரலாக்கி வருகிறார்கள்.