LATEST NEWS
17 வருடங்களை நிறைவு செய்த ‘சில்லுன்னு ஒரு காதல்’ திரைப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?… வைரலாகும் தகவல்…

இயக்குனர் என் கிருஷ்ணன் இயக்கத்தில் 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இப்படத்தினை இப்பொழுது ஒளிபரப்பு செய்தால் கூட சலிப்பு தட்டாது. அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
நடிகர் சூர்யா இப்படத்தில் ரொமான்டிக் ஆக்ஷன் என எல்ல கதாபத்திரத்திலும் அசத்தி இருப்பார். இப்படம் வெளியாகி அப்பொழுதே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு இசை புயல் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய ‘முன்பே வா என் அன்பே வா’ பாடல் தற்போது வரை ரசிகர்களின் விருப்ப பாடலாக இருந்து வருகிறது.
மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சில்லுனு ஒரு காதல் படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பத்தை உண்டாகி சூப்பர்ஹிட்டான இப்படம் உலகளவில் ரூ. 18 கோடி வரை வசூல் செய்தது என கூறப்படுகிறது.