எங்களுக்குள்ள இப்படித்தான் காதல் மலர்ந்துச்சு.. முதல் முறையாக மனம் திறந்த நடிகை தேவயானி..!! - Cinefeeds
Connect with us

CINEMA

எங்களுக்குள்ள இப்படித்தான் காதல் மலர்ந்துச்சு.. முதல் முறையாக மனம் திறந்த நடிகை தேவயானி..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் முன்னணி நடிகையான தேவயானி. இவரின் அழகிய முகம் மற்றும் கொஞ்சி பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் பலரின் மனதையும் கொள்ளையடித்த பெயர் இவருக்கு உண்டு. பெங்காலி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் ஒரு காலகட்டத்தில் படங்களையும் தாண்டி சீரியலில் நடிக்க தொடங்கினார் . அதிலும் குறிப்பாக இவர் நடித்த கோளங்கள் சீரியல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அந்த அளவிற்கு பெரிய வெற்றியை கண்டவர் தேவயானி. தற்போது அவ்வளவு அதிகமாக திரைப்படங்களில் நடிக்காமல் சீரியலில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் தேவயானி.

இதனிடையே தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் தேவயானி தனக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் இடையே காதல் மலர்ந்த கதை குறித்து பேசி உள்ளார். அதாவது நீ வருவாய் என திரைப்படத்திற்கு பிறகு தான் இருவரும் பேச தொடங்கியதாகவும் அதன் பிறகு அப்படியே காதல் மலர்ந்ததாக தேவயானி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.