“உணவகமா அல்லது எமலோகமா..?” மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“உணவகமா அல்லது எமலோகமா..?” மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நர்சாபூரில் உள்ள ‘ஒன் பேலஸ்’ உணவகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் சாய் ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த உணவகத்தில் ‘மண்டி பிரியாணி’ சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சாய் ராம் மற்றும் அவருடன் சாப்பிட்ட பலருக்குக் கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. சாய் ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மேலும் 19 பேர் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜ நரசிம்ஹா, உடனடியாக சமூக நலத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளுடன், உணவகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளையும் ஆய்வக சோதனைக்கு அனுப்ப அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இதற்கிடையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட சோதனையில், அந்த உணவகம் முறையான உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அது உடனடியாகத் தற்காலிகமாக மூடப்பட்டது. பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய உணவகங்கள் மீதும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in