CINEMA
சூப்பர் ஸ்டாரா இருந்துட்டு…. ரஜினி எப்படி இப்படி இருக்காரு…? துஷாரா விஜயன் ஓபன் டாக்..!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் தான் துஷாரா விஜயன். இவர் பேஷன் டிசைன் மற்றும் மாடலில் அதிக ஆர்வம் இருந்ததால் சினிமா துறையில் நுழைந்தார்.கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து சார்பட்ரா, ராயன் படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினி எவ்ளோ நல்ல மனுஷன். சூப்பர் ஸ்டாரா இருந்துட்டு எப்படி இவ்ளோ Kindness ஆ இருக்காரு என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.