BREAKING:யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்.. அதிமுக-வை பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் சத்தியபாமா முதலிடம்.. அதிரும் தாராபுரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்.. அதிமுக-வை பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் சத்தியபாமா முதலிடம்.. அதிரும் தாராபுரம்..!!

Published

on

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த அதிமுகவிற்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா முன்னிலையைப் பிடித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய அதிகாரப்பூர்வ நிலவரப்படி, தவெக வேட்பாளர் சத்தியபாமா 13,285 வாக்குகள் பெற்று அதிரடியாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால் தாராபுரம் தேர்தல் களம் தற்பொழுது தவெக சாதகமாகத் திரும்பத் தொடங்கியுள்ளது.

அதிமுக வேட்பாளர் பானுமதி 12,545 வாக்குகள் பெற்று, தவெக வேட்பாளரை விட 740 வாக்குகள் மட்டுமே பின்தங்கி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மிகக் கடுமையான நேரடிப் போட்டி நிலவி வருகிறது. அதேநேரத்தில், ஆளுங்கட்சியான திமுகவின் வேட்பாளர் சுகன்யா 11,622 வாக்குகள் பெற்று தொடர்ந்து மூன்றாம் இடத்திலேயே நீடிக்கிறார். இந்தத் திடீர் முன்னிலை மாற்றம் தாராபுரம் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in