LATEST NEWS
“ஆக்ஷன் எடுக்க வச்சிடாதீங்க…” பத்திரிகையாளர் போட்ட பதிவு… எக்ஸ் தளத்தில் நேரடியாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்.. சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பு..!!
திரைப்பட விமர்சகரும் சினிமா பத்திரிகையாளருமான ராஜசேகர் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றும், அதற்கு திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் அளித்த நேரடிப் பதிலும் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ படத்தின் சிறப்புத் திரையிடல் குறித்துப் பதிவிட்டிருந்த பத்திரிகையாளர், முந்தைய திராவிட ஆட்சிக் காலத்தில் காலை 9 மணிக்குத்தான் முதல் நாள் முதல் காட்சி அனுமதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போதைய சூழலில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு காலை 8.30 மணிக்கே காட்சிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தற்போது சினிமா துறை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு பரவலான கவனத்தைப் பெற்ற நிலையில், இதற்கு உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்திலேயே மிகவும் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். எக்ஸ் கமெண்டில் நேரடியாகப் பதிவிட்ட அவர், “உங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வைத்து விடாதீர்கள்” என்று எச்சரிக்கும் தொனியில் குறிப்பிட்டதோடு, போலிச் செய்திகளையும் தவறான தகவல்களையும் சமூக வலைதளங்களில் பொதுப்படையாகப் பதிவிடுவதற்கு முன்பாக, உண்மைகளைச் தீர ஆராய்ந்து சரிபார்க்க வேண்டும் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார். சினிமா துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் அரசு அனுமதி குறித்த இந்த இருதரப்பு எக்ஸ் உரையாடல், தற்போதைய அரசியல் மற்றும் திரை உலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
