“வா மச்சான் சரக்கடிக்கலாம்…” குளக்கரைக்கு அழைத்துச் சென்று.. கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட பகீர் ஸ்கெட்ச்.. கணவனுக்கு நேர்ந்த கொடூர கதி.. நடுக்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வா மச்சான் சரக்கடிக்கலாம்…” குளக்கரைக்கு அழைத்துச் சென்று.. கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட பகீர் ஸ்கெட்ச்.. கணவனுக்கு நேர்ந்த கொடூர கதி.. நடுக்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பான்சுவாடா மண்டலத்திற்குட்பட்ட ஹனுமாஜிபேட் கிராமத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த கும்மடி காஷிராம் (26) என்பவரது மனைவி கும்மடி சாவித்திரி, பசுபுலேட்டி சந்தோஷ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது காதலுக்கு காஷிராம் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட சாவித்திரி தன் கள்ளக்காதலன் சந்தோஷ் மற்றும் சிந்தகிந்தி ராமு என்ற மற்றொரு நபருடன் சேர்ந்து ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

இத்திட்டத்தின்படி, கடந்த 23-ஆம் தேதி சந்தோஷும் ராமுவும் சேர்ந்து காஷிராமை மது அருந்தலாம் என ஆசைவார்த்தை கூறி பச்சேரு குளக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவருக்கு அதிகளவில் மது ஊற்றிக் கொடுத்து, அவர் போதையில் நிலைகுலைந்த சமயம் பார்த்து, நைலான் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக காஷிராமின் உடலைக் குளத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். காஷிராமின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், மனைவி சாவித்திரி, கள்ளக்காதலன் சந்தோஷ் மற்றும் உடந்தையாக இருந்த ராமு ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in